நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் செல்பி பாய்ண்ட்டுகளை துவக்கி வைத்த கோவை மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு செல்பி பாயிண்ட்டுகளில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.


கோவை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசு சார்பில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதே சமயம் 100% வாக்குப்பதிவு நடந்திட அரசு சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவையில் செல்பி பாய்ண்ட்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்தார். முன்னதாக வாக்காளர் உறுதிமொழி, கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.



அதனை தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு செல்பி பாயிண்ட்டுகளில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த செல்பி பாய்ண்ட் மற்றும் கையெழுத்து இயக்க பேனர்கள் வைக்கப்பட உள்ளது. இந்த செல்பி பாயிண்ட்டில் "தேர்தல் பருவம்- தேசத்தின் பெருமிதம்" "நமது இலக்கு 100% வாக்குப்பதிவு" "என் ஓட்டு என் உரிமை" என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...