கோவையில் வரும் 18-ம் தேதி பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு - நீநிமன்றத்தில் பாஜக வழக்கு

பிரதமரின் ரோட்ஷோ நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜகவினர் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு அவரச வழக்காக இன்று மாலை 4.30 மணிக்கு விசாரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.


கோவை: கோவையில் வரும் 18-ம் தேதி கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் முதல் ஆர்.எஸ்.புரம் வரை நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோட் ஷோ மற்றும் அதனைத்தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது. இதற்காக பாஜக சார்பில் அனுமதி கேட்டு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடிதம் வழங்கியிருந்த நிலையில், பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், பொதுத்தேர்வு மற்றும் இதுவரை கோவையில் ரோட் ஷோ நடத்த அனுமதி வழங்கியத்தில்லை உள்ளிட்ட காரணங்களை கூறி ரோட் ஷோ நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது.

இந்த நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் காவல் அதிகாரிகளுடன் மத்திய சிறப்பு பாதுகாப்பு படை ஐஜி லவ் குமார் தலைமையிலான எஸ்.பி.ஜி குழுவினர் ஆலோசனை நடத்தினர்.



சுமார் இரண்டு மணி நேர ஆலோசனைக்கு பிறகு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர். பிரதமர் நிகழ்ச்சிக்கான அனுமதி மறுப்பு மற்றும் மத்திய பாதுகாப்பு குழுவினருடனான ஆலோசனை தொடர்பாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனிடம் கருத்து கேட்க முற்பட்டபோது தெளிவான ஒரு முடிவை இல்லாமல் கருத்து கூற முடியாது எனக் கூறி சென்றார்.

இதனையடுத்து பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையிலான பாஜகவினர் கோவை மாநகர காவல் ஆணையரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குபிறகு இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் கூறி சென்றார்.

இதனிடையே பிரதமரின் ரோட்ஷோ நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜகவினர் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு அவரச வழக்காக இன்று மாலை 4.30 மணிக்கு விசாரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...