கோவையில் சிறுமியை வெறித்தனமாக கடிக்க துரத்திய தெரு நாய்கள் - சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் சிசிடிவி வீடியோ

சூப்பர் கார்டன் பகுதியில் சிறுமி ஒருவர் பள்ளி சென்று கொண்டிருந்த போது அந்த பகுதியில் இருந்த தெரு நாய்கள் அந்த சிறுமியை துரத்தியது. அதிர்ச்சி அடைந்த சிறுமி வேகமாக அலறிக்கொண்டு வீட்டில் உள்ளே நுழைந்ததால் தெரு நாயிடமிருந்து சிறுமி தப்பினார்.


கோவை:கோவை மாநகராட்சி பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சி தெரு நாய்களை கட்டுப்படுத்த எந்த விதமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

மேலும் கோவை மாநகராட்சி 86-வது வார்டுக்கு உட்பட்ட சூப்பர் கார்டன் பகுதியில் சிறுமி ஒருவர் பள்ளி சென்று கொண்டிருந்த போது அந்த பகுதியில் இருந்த தெரு நாய்கள் அந்த சிறுமியை துரத்தியது. அதிர்ச்சி அடைந்த சிறுமி வேகமாக அலறிக்கொண்டு வீட்டில் உள்ளே நுழைந்ததால் தெரு நாயிடமிருந்து சிறுமி தப்பினார்.

தெருநாய்கள் சம்பந்தமாக பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், அசம்பாவிதங்கள் நடக்கும் முன்னே அதிகாரிகள் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தெரு நாய் சிறுமியை துரத்திய காட்சி அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சி சமூக வலைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...