குனியமுத்தூரில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு ஆட்டோ டிரைவர் பாலியல் தொல்லை

யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பியோடிய ஆட்டோ டிரைவரை குனியமுத்தூர் போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர் கோவையில் உள்ள நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், உடல் நலம் சரியில்லாத காரணத்தால் நேற்று (மார்ச்.18) இளம்பெண் வேலைக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் இளம்பெண் தனியாக இருந்ததை அறிந்து வீட்டுக்குள் நுழைந்தார். அவர் திடீரென இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கூச்சல் போட்டார். இதனால் பயந்து போன அந்த வாலிபர் அவரை மிரட்டி சென்றார். இது குறித்து இளம்பெண் தனது கணவருக்கு போனில் தகவல் கொடுத்தார்.

வீட்டுக்கு வந்த அவரது கணவர் அந்த வாலிபரை கண்டித்தார். அக்கம்பக்கத்தினர் சிலர் அங்கு கூடினர். இதனையடுத்து அந்த வாலிபர் அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியும், கற்களை வீசி எறிந்தும் அங்கிருந்து தப்பி சென்றார்.

இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்தி(27) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...