கோவையில் பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மாணவிகள் பங்கேற்ற விவகாரம் - பள்ளியில் அதிகாரிகள் விசாரணை

மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் புனிதா, அந்தோணியம்மாள், மற்றும் தொழிலாளர் துறையின் இணை ஆணையர் பள்ளி தலைமையாசிரியை புகழ்வடிவு மற்றும் மற்றும் மாணவிகள், ஆசிரியர்களிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.



கோவை: கோவையில் நேற்று பிரதமர் கலந்துகொண்ட ரோடு ஷோ நிகழ்ச்சியில் ஸ்ரீ சாய்பாபா வித்யாலயம் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிராந்திகுமார் பாடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் தொழிலாளர் துறையின் இணை ஆணையர் ஆகியோரிடம் விசாரணை நடத்த உத்திரவிட்டுள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

பிரதமர் மோடியின் ரோடு ஷோவில், மாணவிகள் பங்கேற்றது குறித்து, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு, விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பினார்.

அதில், தேர்தல் பிரச்சாரம் போன்ற செயல்பாடுகளுக்கு குழந்தைகளை பயன்படுத்தக்கூடாது என்ற தேர்தல் விதிமுறைகளை மீறி மாணவ, மாணவிகளை அழைத்து சென்றுள்ளதாக ஊடகங்களின் வழியாக தெரிய வந்துள்ளதாக அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்நிகழ்விற்கு மாணவர்களை அழைத்து சென்ற தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மீது கடிதம் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கவும், பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.



அதனடிப்படையில் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள், மற்றும் தொழிலாளர் துறையின் இணை ஆணையர் பள்ளி தலைமையாசிரியை புகழ்வடிவு மற்றும் மாணவிகள், ஆசிரியர்களிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.



விசாராணையின் முடிவில் தலைமையாசிரியர், ஆசிரியர், மாணவிகளின் விளக்கத்தை எழுத்துப்பூர்வாக எழுதி வாங்கி விட்டு கிளம்பினர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...