கோவையில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் - ஆட்சியர் ஆய்வு

நிர்மலா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பினை கோவை மாவட்ட ஆட்சியரும், கோவை தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரான கிராந்தி குமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.


கோவை: பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் தொகுதி வாரியாக வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று (மார்ச்.24) நடைபெற்றது.

கோவை மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளுக்கு 3096 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது.



இந்த பயிற்சி வகுப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த விளக்கம், மாஸ்டர் கவரில் உள்ள முக்கியமான படிவங்களை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல், Non Statutory 11 Covers குறித்த விவரங்கள், வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு மண்டல அலுவலர்கள் வாக்குப்பதிவு தலைமை அலுவலர்கள் ஒப்படைக்க வேண்டியவை, Poll Monitoring System செயலிக் குறித்த விளக்கம் உள்ளிட்டவை எடுத்துரைக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், நிர்மலா கலை அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்ற பயிற்சி வகுப்பினை கோவை மாவட்ட ஆட்சியரும் கோவை தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரான கிராந்தி குமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...