பொள்ளாச்சி அருகே நான்கு வழிச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 கல்லூரி மாணவர்கள் பலி

கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் அரசம்பாளையம் பிரிவு அருகில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற 2 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பாலியாகினர்.


கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு கொண்டம்பட்டி பகுதியில் தனியார் சித்த மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது.‌ இதில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஜெய்ஷித்தல் முண்டே வயது (21), ரிஷி கேஸ்ரமேஸ்வர் குட்டே(20)ஆகியோர் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இரண்டு பேரும் டீ குடிப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பி கொண்டிருக்கும் போது கோவை- பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் அரசம்பாளையம் பிரிவு அருகில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தில் முன்பகுதியில் பலமாக மோதியதில் சம்பவ இடத்திலே இரண்டு கல்லூரி மாணவர்களும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்தில் பலியானார்கள்.



இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனம் மீது மோதிய வாகனத்தை நான்கு வழி சாலை அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கல்லூரி மாணவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதிய வாகனத்தை தேடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...