கோவை மதுக்கரையில் கணவன் கொலை செய்யப்பட்ட வழக்கு - மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை

கடந்த 2021ஆம் ஆண்டு கணவனை கொன்று புதைத்த வழக்கின் விசாரணை நிறைவடைந்தநிலையில், இன்று மனைவி மற்றும் கள்ளக்காதலன் ஆகியோருக்கு ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ.6000 அபராதமும் விதித்து நீதிபதி சசிரேகா தீர்ப்பு வழங்கினார்.


கோவை: கோவை மதுக்கரையை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 35). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அமுதா (36). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுக்கரையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சங்கர் (32) என்பவர் வேலை பார்த்து வந்தார்.அமுதாவுக்கும், சங்கருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இதனால் அவர்கள் தனிமையில் சந்தித்து அன்பை வெளிப்படுத்தி வந்தனர். இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் அமுதாவின் கணவர் நாகராஜிக்கு தெரியவந்தது.இதையடுத்து அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் நாகராஜை கொலை செய்ய அமுதா மற்றும் சங்கர் ஆகியோர் முடிவு செய்தனர்.



அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ந் தேதி அமுதா, சங்கர் ஆகியோர் சேர்ந்து நாகராஜை சுத்தியலால் தாக்கி கொலை செய்தனர். பின்னர் அவரின் உடலை அதே பகுதியில் மண்ணில் புதைத்து வைத்துவிட்டு ஒன்றும் தெரியாதது போன்று இருந்தனர்.அங்கு மண் மேடாக இருப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர். அங்கு நாகராஜ் கொலை செய்யப்பட்டு உடல் மண்ணில் புதைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கணவரை கொன்ற மனைவி அமுதா, கள்ளக்காதலன் சங்கர் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை1-வது கூடுதல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 15 பேர் சாட்சி அளித்தனர். விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று (29-4-2024) மாலை தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி சசிரேகா விசாரித்தார். அதில் நாகராஜின் மனைவி அமுதா, கள்ளக்காதலன் சங்கர் ஆகியோருக்கு ஆயுள் சிறை தண்டனை, தலா ரூ.6000 அபராதம் விதித்து நீதிபதி சசிரேகா தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி, சாட்சிகளை கோர்ட்டில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற தலைமை காவலர் ஆனந்தகுமார் ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பாராட்டினார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...