கோவை கரும்புக்கடை சாரமேடுவில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை..!

கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.


Coimbatore: கோவை கரும்புக்கடைசாரமேடு பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது



தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி எடுக்கும் நிலையிலும் நாளுக்கு நாள் வேலையின் தாக்கம் அதிகமாக இருந்து வெப்ப அலை வீசுவதாலும் போதிய மழை நீர் இல்லாததாலும் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.



இந்த நிலையில், பொதுமக்கள் குடிக்க தண்ணீர் இன்றியும், அணைகளில் நீர்வரத்து வரலாறு காணாத அளவில் குறைந்து வருவதால் கரும்புக்கடைசாரமேடு பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.

விவசாயிகளும் போதிய நீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். கால்நடைகளுக்கு புற்கள் கூட இல்லாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். இதன் காரணமாக மழை பெய்ய வேண்டி கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியில் காலை 7 மணி அளவில் மௌலவி யூனுஸ்ஃபிர்தெளசி சிறப்பு தொழுகை நடத்தினார்.



இதில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை மற்றும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்த தொழுகையில் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பொதுமக்கள் கலந்து கொண்டு மழை வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...