மே தினத்தை முன்னிட்டு உடுமலையில் எஐடியுசி மற்றும் சிஐடியு சார்பில் பொதுக்கூட்டம் - தொண்டர்கள் பங்கேற்பு

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அதிக அளவு பணத்தை செலவு செய்துள்ளார். மக்கள் ஒருபோதும் மோடியை தேர்ந்து எடுக்க மாட்டார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட தலைவர் மோகன் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் எஐடியுசி மற்றும் சிஐடியு சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெங்கிட கிருஷ்ணா சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சவுந்தரராஜன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். திருப்பூர் மாவட்ட தலைவர் மோகன் சிறப்புரை ஆற்றினார்.



அப்போது மோகன் பேசியாதவது, நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அதிக அளவு பணத்தை செலவு செய்துள்ளார். மக்கள் ஒருபோதும் மோடியை தேர்ந்து எடுக்க மாட்டார்கள் என பேசினர். இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதே போன்று உடுமலை நகராட்சி அலுவலகத்தில் முன்பு சிஐடியு சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட குழு விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் எல்லம்மாள் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் குமார் சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் ஜெகதீசன், சிஜடியூ தலைவர் கனகராஜ், சிபிஐஎம் உடுமலைநகரச் செயலாளர் பாலதண்டபாணி ரங்கநாதன் மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். பொதுக் கூட்டங்களை யொட்டி உடுமலை போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...