கோவை ஆர்.எஸ்.புரம் அருகே செல்போன் டவரில் இருந்து விழுந்து ஊழியர் பலி - ஒப்பந்ததாரர் மீது வழக்கு

ஆர்.எஸ்.புரம் சர்.சி.வி ரோடு ஜங்ஷனில் உள்ள செல்போன் டவரில் ஏறி பராமரிப்பு பணி செய்து கொண்டிருந்த ஊழியர், திடீரென நிலைதடுமாறி 15 மீட்டர் உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூரை சேர்ந்தவர் கார்த்திக் (32). இவர் கோவையில் தங்கியிருந்து செல்போன் டவர் பராமரிப்பு பணி ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று (மே.2) கார்த்திக் ஆர்.எஸ்.புரம் சர்.சி.வி ரோடு ஜங்ஷனில் உள்ள செல்போன் டவரில் ஏறி பராமரிப்பு பணி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி 15 மீட்டர் உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.



இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கார்த்திக்கை பரிசோதனை செய்து விட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆர்.எஸ்.புரம் போலீசார் அவரது உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக செல்போன் டவர் ஒப்பந்ததாரர் வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த வேலுசாமி (60) என்பவர் மீது போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி ஊழியரை பணிக்கு அமர்த்தியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...