பிளஸ் டூ தேர்வில் 97.45 சதவீதம் - திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்ச்சி விகிதத்தில் 97.45 சதவீதம் பெற்றுக்கொடுத்த மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 23 ஆயிரத்து 849 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் மாணவர்கள் 10,440 பேரும், மாணவிகள் 12 ஆயிரத்து 802 பேரும் என மொத்தம் 23 ஆயிரத்து 252 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதன் சதவீதம் 97.45 ஆகும். தமிழகத்தில் முதல் இடம் பிடித்து திருப்பூர் மாவட்டம் சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு 2-து இடம் பிடித்திருந்தாலும், அதற்கு முன்னதாக 2019, 2020ம் ஆண்டுகளில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. நடப்பு ஆண்டும் முதல் இடம் பிடித்ததால் 3 முறை முதலிடம் பிடித்த மாவட்டம் என்ற பெருமையை திருப்பூர் மாவட்டம் பெற்றுள்ளது.

சாதனை படைத்த மாணவர்களை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் கல்வி அதிகாரி கீதா மற்றும் ஆசிரியர்கள் பலரும் பாராட்டினர். இதுபோல் அரசு பள்ளி அளவிலும் 95.75 சதவீதம் பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.



திருப்பூர் மாவட்டத்தில் 77 அரசு பள்ளிகள் உள்ள நிலையில், 4,548 மாணவர்கள், மாணவிகள் 5,935 மாணவிகள் என மொத்தம் 10 ஆயிரத்து 483 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 4,274 பேர், மாணவிகள் 5, 763 பேர் என மொத்தம் 10 ஆயிரத்து 037 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற 23,242 மாணவர்களும் தங்களது உயர்கல்வி தொடர வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் +2 தேர்ச்சி விகிதத்தில் 97.45 சதவீதம் பெற்றுக்கொடுத்த மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எனது வாழ்த்துகள். திருப்பூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற 23,242 மாணவர்களும், உயர்கல்வி தொடர வேண்டும். நன்றாக படிக்க வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள். மேலும் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை பொருத்தவரை 95.75 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாணவர்கள், ஆசிரியர்களின் கடின உழைப்பால் தான் நாம் முதலிடத்தை அடைய முடிந்தது. முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகிய நாங்கள் எல்லாம் சிறு வழிகாட்டுதல் மட்டுமே. அதுமட்டுமின்றி திருப்பூர் மாவட்டம் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 3வது முறை முதலிடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...