தாராபுரம் அருகே சின்னக்கம்பாளையத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் – கட்டிட தொழிலாளி சிறையில் அடைப்பு

சின்னக்கம்பாளையத்தில் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்த கட்டிட தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த தேர்பட்டி கிராமத்தில் கணவனை இழந்த விஜயா என்பவர் தனது 17-வயது மகளுடன் வசித்து வருகிறார். இவர் கூலிவேலைக்கு சென்றுவந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சிவகுமார்(எ)சிவா (38) கடந்த 25.12.2023 தேதி விஜயா வீட்டிற்கு சென்று வேலைக்கு ஆள் வேண்டும் எனக்கூறி விஜயாவின் 17-வயது மகளை அழைத்து சென்று சிறுமியுடன் பழகி வந்துள்ளார்.

இதனை அறிந்த சிறுமியின் தாய் தேர்பட்டி பகுதியில் இருந்து சின்னக்கம்பாளையம் பகுதிக்கு தனது விஜயாவின் தாய் வீட்டின் அருகே வீட்டை மாற்றினார். விஜயா வீட்டில் இல்லாத நேரம் பார்த்து சிவகுமார் அடிக்கடி சென்று சிறுமியை பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.சிறுமிக்கு கடந்த 16.05.24 வயிற்று வலி இருந்ததால் தாராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, சிறுமி கர்ப்பமாக இருப்பதாக சிவாவிடம் சொல்லியபோது,யார் காரணம் என்று கேட்டால் என்னை சொல்லக்கூடாது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இறந்து போன சின்னக்காம்பாளையத்தை சேர்ந்த எனது மச்சினன் மகன் கரண்குமார் தான் காரணம் என்று சொல்ல வேண்டும். இல்லையென்றால் உன்னையும் உன் அம்மாவையயும் கொன்னுவிடுவேன் என்று மிரட்டியதாக சிறுமியின் தாயார் கூறியுள்ளார்.



அதனால் பயந்துகொண்டு யாரிடமும் சொல்லவில்லை. 22.05.2024-ம் தேதி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றபோது மருத்துவர் சிறுமியை பரிசோதித்து விட்டு கர்ப்பமாக இருப்பதாக கூறினர். யார் காரணம் என்று கேட்டபோது, சிவா மிரட்டி சொல்லி கொடுத்தபடி மருத்துவமனையில் கரன் பெயரையும், ஆதாரில் உள்ள எனது பாட்டி வீட்டு முகவரியையும், மாற்றி சொல்லிவிட்டேன்.

சிறுமி கர்ப்பமாக இருக்கும் தகவல் தெரிந்து கொண்ட போலீசார் விசாரிக்கும் போது, நான் கரண்குமார் தான் காரணம் என்று திரும்ப திரும்ப சொல்லிவிட்டு இடையில் மருத்துவ பரிசோனைக்கு சென்றுவிட்டேன் என்று அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து சிறுமியை கர்ப்பமாக்கி, மிரட்டிய தேர்பட்டி சிவா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் சிவா என்கின்ற சிவகுமார் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்பு, சிவகுமாரை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...