கோவையில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கும் பணி – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குறிச்சி பிரிவு முதல் போத்தனூர் ரயில் நிலையம் வரை சேதமடைந்த சாலைகள் சீரமைக்கும் பணியினை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குறிச்சி பிரிவு முதல் போத்தனூர் சாலை வரை சேதமடைந்த சாலைகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (28.05.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கும் இடங்களில் சீர் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, மாநகராட்சி ஆணையாளர், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குறிச்சி பிரிவு முதல் போத்தனூர் ரயில் நிலையம் வரை உள்ள சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளால் சேதமடைந்த சாலைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு சாலை சீரமைக்கும் பணியினை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



அதனைத் தொடர்ந்து, மேற்கு மண்டலம் வார்டு எண்.20க்குட்பட்ட கரிமலை செட்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பழுதடைந்த விளையாட்டு உபகரணங்கள், மின் ஒயர்களை சரி செய்யவும் மற்றும் மழைக்காலங்களில் பூங்கா வளாகத்தில் தேங்கும் மழை நீரை முழுமையாக வெளியேற்றிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



முன்னதாக, மத்தியமண்டலத்திற்குட்பட்ட சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர் சாலையில் மேட்டுப்பாளையம் சாலை முதல் தடாகம் சாலை வரை சுமார் 1.82 கி.மீட்டர் நீளத்திற்கு மேற்கொள்ளப்படவுள்ள சாலை சீரமைக்கும் பணியினை ஆணையாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பணியினை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின்போது, மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், மாநகர துணை பொறியாளர் கருப்பசாமி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பிரசன்னவெங்கடேசன், உதவி ஆணையர்கள் செந்தில்குமரன், சந்தியா, உதவி செயற்பொறியாளர்கள் கனகராஜ், பிரபாகரன், மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், சுகாதார ஆய்வாளர் சலைத், உதவி பொறியாளர்கள் சபரிராஜ், பர்மான் அலி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...