கோவை வழியாக செல்லும் பல்வேறு ரயில் சேவைகளில் மாற்றம்

கோவை ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக, 05.06.2024 மற்றும் 06.06.2024 ஆகிய தேதிகளில் பல ரயில்கள் இருகூர் - போத்தனூர் வழியாக இயக்கப்படும்.


கோவை: பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை வழியாக செல்லும் பல்வேறு ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அண்மையில் அறிவித்துள்ளது.

அதன்படி பின்வரும் ரயில் சேவைகள் இருகூர் - போத்தனூர் வழியாக திருப்பி விடப்படும்.

1. 05.06.2024 அன்று கோயம்புத்தூர் வழியாக இயக்க திட்டமிடப்பட்ட ரயில் எண்.22504 திப்ருகார் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ், இருகூர் - போதனூர் வழியாக இயக்கப்படும்.

இதனால், இந்த ரயில் கோயம்புத்தூர் ஜங்சனில் நின்று செல்லாது. அதற்கு பதிலாக போத்தனூர் ஜங்சனில் ரயில் நிறுத்தப்படும்.

2. ரயில் எண்.16159 சென்னை எழும்பூர் - மங்களூர் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், 05.06.2024 & 06.06.2024 ஆகிய தேதிகளில் இருகூர் - போதனூர் வழியாக இயக்கப்படும்.இதன் விளைவாக, இந்த ரயில் கோயம்புத்தூர் வடக்கு மற்றும் கோயம்புத்தூர் ஜங்சனில்நிற்காது.

3. ரயில் எண்.12626 புது தில்லி - திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ், 05.06.2024 & 06.06.2024 ஆகிய தேதிகளில் இருகூர் - போதனூர் வழியாக இயக்கப்படும்.இதனால், இந்த ரயில் கோயம்புத்தூர் ஜங்சனில்நிற்காது. அதற்கு பதிலாக போத்தனூர் ஜங்சனில் ரயில் நிறுத்தப்படும்.

4. ரயில் எண்.12677 KSR பெங்களூரு - எர்ணாகுளம் Jn இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், 05.06.2024 & 06.06.2024 அன்று இருகூர் - போதனூர் வழியாக இயக்கப்படும்.இதனால், இந்த ரயில் கோயம்புத்தூர் ஜங்சனில்நிற்காமல் போத்தனூர் ஜங்சனில் நிறுத்தப்படும்.

5. ரயில் எண்.22642 ஷாலிமார் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், 06.06.2024 அன்று இருகூர் - போதனூர் வழியாக இயக்கப்படும்.இந்த ரயிலும் போத்தனூர் ஜங்சனில்நிறுத்தப்படும்.

6. ரயில் எண்.16318 ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி கத்ரா - கன்னியாகுமரி ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ், 06.06.2024 அன்று இருகூர் - போதனூர் வழியாக இயக்கப்படும்.இதனால், இந்த ரயில் கோயம்புத்தூர் ஜங்சனில் நிறுத்தப்படாமல் போத்தனூர் ஜங்சனில் நிறுத்தப்படும்.

B. பின்வரும் ரயில் சேவைகள் போத்தனூர் - இருகூர் வழியாக திருப்பி விடப்படும்

1. ரயில் எண்.13352 ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ், 05.06.2024 & 06.06.2024 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர் வழியாக இயக்க திட்டமிடப்பட்டது. ஆனால், ரயில் போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கப்படும்.போத்தனூர் ஜங்சனில் ரயில் நிறுத்தம் வழங்கப்படும்.

2. 05.06.2024 & 06.06.2024 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர் வழியாக இயக்கப்படும் ரயில் எண்.12678 எர்ணாகுளம் ஜே.என் - கே.எஸ்.ஆர் பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கப்படும். இவ்வாறு தென்னக ரயில்வே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...