கோவை ஆர்.எஸ்.புரத்தில் பர்னிசிங் அலுவலகத்தில் தீ விபத்து - பொருட்கள் எரிந்து சேதம்

பர்னிசிங் அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து ஏற்பட்டவுடன் ஊழியர்கள் வெளியேறியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் கிழக்கு சம்பந்தம் சாலையில் தனியாருக்கு சொந்தமான பர்னிசிங் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து சுதாரித்துக் கொண்ட பணியாளர்கள், உடனடியாக வெளியேறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.



தகவலை அடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்தில் சுதாரித்துக் கொண்டு வெளியேறியதால் பணியாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.



தீ விபத்தில் அலுவலகத்தில் இருந்த பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இது குறித்து ஆர்.எஸ் புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...