கோவையில் மாற்றுத்திறனாளி குழந்தைக்கு வீடு வழங்கி தமிழக வெற்றிக் கழகத்தினர் அசத்தல்

தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டம் மூலம் கோவை சுந்தராபுரம் கோண்டி காலனி பகுதியில் மாற்றுத்திறனாளி குழந்தையின் குடும்பத்திற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்டி கொடுத்து, அரிசி, மளிகை என வீட்டு உபயோகப்பொருட்களையும் கோவை மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் வழங்கியுள்ளனர்.


கோவை: கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்ட இளைஞரணியினர் தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டம் மூலமாக மாற்றுத்திறனாளி குழந்தையின் குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுத்து, வீட்டு உபயோகப் பொருட்களையும் வழங்கி அசத்தியுள்ளனர்.

தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கி உள்ள நடிகர் விஜய் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் செய்வதில் கவனம் செலுத்த துவங்கி உள்ளார். அவரது அன்பு கட்டளைக்கு இணங்க தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை தெற்கு மாவட்ட இளைஞரணியினர், இலவச படிப்பகம், குருதி கொடை முகாம், சாலையோர மக்களுக்கு குளிர் கால போர்வை மற்றும் உணவு வழங்குவது போன்ற மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான், தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டம் மூலம் கோவை சுந்தராபுரம் கோண்டி காலனி பகுதியில் ஒரு பயனாளிகளுக்கு வீடு கட்டி கொடுத்து, அரிசி, மளிகை என வீட்டு உபயோகப்பொருட்களையும் வழங்கியுள்ளனர்.



இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தேசிய செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பயனாளியிடம் வீட்டின் சாவியை வழங்கி, வீட்டிற்கு தேவையான பொருட்களையும் வழங்கினார்.



மாற்றுத்திறனாளி குழந்தையை வைத்துள்ள அந்த குடும்பத்தினருக்கு சரியான ஒரு இடம் இல்லாமல் தவித்து வந்த நிலையில், களத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்த, தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பாபு, உடனடியாக தனது நிர்வாகிகள் உதவியுடன் சுமார் ஒன்றரை இலட்சம் மதீப்பீட்டில் இலவச வீட்டை வழங்கியுள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...