புல்லுக்காடு பகுதியில் தூய்மைப் பணியாளர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி மாமன்ற உறுப்பினர் சார்பில் பிரியாணி

பக்ரீத் பண்டிகையொட்டி 86-வார்டில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், குடிநீர், மின் ஊழியர்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார மையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாமன்ற உறுப்பினர் அகமது கபீர் மற்றும் இஸ்லாமிய மக்கள் சார்பாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.


கோவை: ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையொட்டி கோவை மாநகராட்சி 86-வது வார்டில் உள்ள உக்கடம் புல்லுக்காடு பகுதியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி மாமன்ற உறுப்பினர் அகமது கபீர் சார்பில் பிரியாணி மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டும் பிரியாணி, புத்தாடை இன்று ஜூன்.18 வழங்கப்பட்டது.



இந்நிலையில் நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் பக்ரீத் பண்டிகையொட்டி 86-வார்டில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், குடிநீர், மின் ஊழியர்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார மையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கோவை புல்லுக்காட்டில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மைய வளாகத்தில் 86-வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும் இஸ்லாமிய மக்கள் சார்பாக 200-க்கும் மேற்பட்ட வார்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சிக்கன் பிரியாணி இன்று ஜூன்.18 வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஆண்களுக்கு வேஷ்டி, சட்டை பெண்களுக்கு சேலை மற்றும் குழந்தைகளுக்கு குழந்தைகள் உடுத்தும் புத்தாடை என 200-க்கும் மேற்பட்டோருக்கு பக்ரீத் பண்டிகையொட்டி இலவசமாக வழங்கப்பட்டது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...