கோவையில் 'தோழி விடுதிகள்' அமைக்கப்பட இடங்கள் தேர்வு

தமிழக அரசு கோவையில் பணிபுரியும் மகளிருக்கான 'தோழி விடுதிகள்' திட்டத்திற்கு அமைக்கப்பட உள்ள இடங்களை தேர்வு செய்துள்ளது. இது மகளிருக்கு நிறைவான வசதிகளுடன் கூடிய விடுதிகளை உறுதி செய்வதற்காக உள்ளது.


Coimbatore: வெளிமாவட்டங்களில் இருந்து பிற மாவட்டங்களில் உள்ள மாநகரங்களுக்கு பணிபுரிய பெண்கள் செல்லும் போது பலரும் தனியார் விடுதிகளில் தங்குவர். பெண்கள் அனைவர்க்கும் தனியார் விடுதி கட்டணங்களை செலுத்துவது சுலபமாக இருக்காது. சிலருக்கு பாதுகாப்பு குறித்தும் ஐயமிருக்கும். மேலும் பெண்கள் நலன் கருதி பல்வேறு மாவட்டங்களில் தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை'தோழி விடுதிகள்' திறக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு, ரூ.13 கோடி மதிப்பில் செங்கல்பட்டு மற்றும் திருச்சியில் மகளிர் விடுதிகள் திறக்கப்பட்டன. மேலும் ரூ.3.42 கோடி மதிப்பில் சென்னை, அடையாறு, விழுப்புரம், தஞ்சை, சேலம், வேலூர், நெல்லை மற்றும் பெரம்பலூரில் மொத்தமாக 7 விடுதிகள் புதிப்பிக்கப்பட்டு பயன்பட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 

தனியார் விடுதிகளுக்கு நிகரான அனைத்து வசதிகளும் இந்த தோழி விடுதிகளில் வழங்கப்பட்துள்ளதாகவும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா, பயோமெட்ரிக் முறையில் திறக்கும் கேட்கள் இருப்பதால்பாதுகாப்பு வசதிகளும் சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

இந்த விடுதிகளில் தங்க முன்பதிவு செய்ய விரும்புவோர், https://www.tnwwhcl.in/ எனும் இணையத்தளம் மூலம் தங்களுக்கு தேவை படும் அறைகளை புக் செய்யலாம். இதன் கட்டணம் குறைந்தபட்சம் ரூ.4000 அதிகபட்சம் ரூ.6,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பின் போது, தமிழக அரசு கோவை, சென்னை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் பணிபுரியும் மகளீருக்கான 'தோழி விடுதிகள்' திட்டம்கீழ் பெண்களுக்கான புதிய விடுதிகள் அமைக்க ரூ. 26 கோடி ஓதுக்கி உள்ளது.

இந்நிலையில் இதற்கு இடங்கள் தேர்வு செய்யும் பணியை அரசு ஜூன்.18 மேற்கொண்டுள்ளது. தற்போது கோவை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் கீழ் உள்ள நிலங்கள் இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...