கோவையில் காதல் விவகாரத்தில் சித்தப்பாவை குத்திக் கொன்ற காதலன்

கோவையில் காதலியை கூட்டிவந்த காதலனிடம் மீட்க வந்த சித்தப்பாவை குத்திக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது. இதில் சித்தப்பா மரணம் அடைந்துள்ளார் மற்றும் ஒரு நபர் காயமடைந்த நிலையில் சிகிச்சையில் உள்ளார்.



Coimbatore: கோவை சுப்பிரமணியம்பாளையத்தைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் மிதுன், 20 வயதான இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த ஆண்டு டிப்ளமோ முடித்துள்ளார்.

அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்த சாய்பாபா காலனியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரது 19 வயதான மகள் ஹர்சினி என்பரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவர கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை மிதுன் ஹர்சினியை கூட்டி வந்து விட்டதாக தெரிகிறது. வீட்டில் ஹர்சினி இல்லாததை அடுத்து ஹர்சினியின் சித்தப்பா மணிகண்டன் மிதுனின் செல்போனுக்கு அழைத்து கேட்டுள்ளார்.



அப்போது தான் கணுவாயில் இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து மணிகண்டன் ஹர்சினியின் அண்ணன் ஆதித்யா மற்றும் ரெட் டேக்சியில் டிரைவாக வேலை செய்து வரும் காந்திமாநகர் பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் செல்வகணபதி என்பருடன் கால் டேக்சியை எடுத்துக் கொண்டு தேடிச் சென்றுள்ளனர்.

அங்கு காணாததால் மீண்டு அழைத்த போது வெவ்வேறு இடங்களைச் சொல்லி அலைக்கழித்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் சுப்பிரமணியம்பாளையம் கே.என்.ஜி. புதூர் சாலையில் செல்லும் போது அங்கிருந்த பேக்கரி எதிரே சாலை ஓரமாக மிதுன், அவரது நண்பர் பிரகாஷ் மற்றும் ஆட்டோ டிரைவர் முத்து ஆகிய மூவரும் நின்று கொண்டிருந்துள்ளனர்.

அவர்களை பார்த்து மணிகண்டன் எனது அண்ணன் மகள் ஹர்ஷினியை எங்கே உள்ளார் என கேட்டு அவர்களுடன் வாக்கு வாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் வாக்கு வாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது மிதுன் தன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து மணிகண்டன் இடது மார்பு மற்றும் இடது கை தோல்பட்டையில் குத்தியுள்ளார். தடுக்க சென்ற ரெட் டாக்ஸி டிரைவர் செல்வகணபதியின் வயிற்று பகுதியில் குத்திவிட்டு  மூவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். 



இதையடுத்து காயமடைந்த செல்வகணபதி போலீசார் மற்றும் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதற்குள் அங்கிருந்தவர்கள் மணிகண்டனை கோவை கங்கா மருத்துவமனைக்கு ஆட்டோ மூலம் கொண்டுசென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே மணிகண்டன் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். 



மேலும் காயமடைந்த ரெட் டாக்ஸி டிரைவரான செல்வகணபதி கோவை சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார். தப்பியோடிய குற்றவாளிகள் மூவரையும் துடியலூர் போலிசார் சம்பவ இடம் சென்று விசாரணை செய்து தேடி வருகிறார்கள்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...