கோவை விமான நிலைய ஒப்பந்த பணியாளர்கள் பணி நீக்கம் – பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியரிடம் புகார்

45 வயதை கடந்து விட்டதாக கூறி 48 தொழிலாளர்களை எந்தவித முன்னறிவிப்பு இன்றி பணியில் இருந்து ஒப்பந்தம் நிறுவனத்தினர் நீக்கி விட்டனர். இதனை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கோவை ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.


கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 10 ஆண்டுக்கு மேலாக 48 நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தனர். பணிபுரியும் பணியாளர்கள் பட்டியல் மற்றும் பழங்குடி மற்றும் மிகவும் பிற்படுத்தோர் குடும்பத்தை சார்ந்தவர்கள். ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்த குறைந்தபட்ச கூலி ரூ. 745 வழங்கப்படுகிறது.

ஆனால் ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம் வெறும் ரூ.546 மட்டுமே கூலி வழங்கி வந்தது. இது குறித்து ஒப்பந்தம் நிறுவனத்திடம் கேட்டபோது எந்தவித காரணமும், அறிவிப்பும் இன்றி 45 வயதை கடந்து விட்டதாக கூறி 48 தொழிலாளர்களை எந்தவிதமான முன்னறிவிப்பு இன்றி பணியில் இருந்து நீக்கி விட்டனர்.

கூலி, பணிக்கொடை, ESI, PF உள்ளிட்டு பணப் பயன்கள் தொகை வழங்காமல் காரணமின்றி திடீரென பணியில் இருந்து நீக்கிவிட்டதால் வீட்டு வாடகை செலுத்த முடியாமலும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி விட்டனர். அதனை ரத்து செய்ய வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் இன்று ஜூன்.24 புகார் மனு அளித்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...