கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நீட்டிப்பு

பெற்றோர்கள், மாணவா்களின் கோரிக்கையை ஏற்று அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்வு ஜூன் 26 ஆம் தேதி மாலை வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாகப் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.



கோவை: வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான இளம் அறிவியல் ஒருங்கிணைந்த மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு முதலில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 23 முதல் 25 ஆம் தேதி மாலை 5 மணி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தக் கலந்தாய்வு ஜூன் 26 ஆம் தேதி மாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள், மாணவா்களின் கோரிக்கையை ஏற்று அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்வு மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டிருப்பதாகப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள் தங்களின் விருப்பப்படி பட்டப்படிப்புகள், கல்லூரிகளை மாற்றி அமைத்துக்கொள்ளலாம். மாற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை மாணவா்கள் இறுதியாக சமா்ப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்கள் இட ஒதுக்கீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும். இதில் எந்த மாற்றமும் செய்யாவிட்டால், விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்தபோது தோ்வு செய்த பாடப்பிரிவு, கல்லூரியே இட ஒதுக்கீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும். இந்தக் கலந்தாய்வுக்காக மாணவா்கள் செலுத்தும் கட்டணம் பின்னா் திருப்பி வழங்கப்படும். மேலும், இந்த இடஒதுக்கீட்டில் சோ்க்கை கிடைக்காத மாணவா்களின் விண்ணப்பங்கள் பொது கலந்தாய்வு இட ஒதுக்கீட்டின் கீழ் பரிசீலிக்கப்படும் என்றும் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...