கோவையில் வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்து பறிமுதல் - வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை

கணியூர் சுங்கச்சாவடி அருகே அருணாச்சல் பிரதேச மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்தை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பிடித்து பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.


கோவை: வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்திற்குள் இயக்கக் கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ள நிலையில் கோவையில் அருணாச்சல் பிரதேச மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்து ஒன்றை சிறை பிடித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் கல்லடா என்ற நிறுவனத்திற்கு சொந்தமான குளிர்சாதன வசதி கொண்ட ஆம்னி பேருந்து இன்று ஜூன்.27 காலை சுமார் 6 மணி அளவில் கோவை கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் சுங்கச்சாவடி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த கோவை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பேருந்தை நிறுத்தி ஆய்வு செய்துள்ளனர்.



அப்போது அந்த பேருந்து அருணாச்சல பிரதேசம் மாநில பதிவெண் கொண்டிருந்ததையடுத்து அப்பேருந்தினை சிறை பிடித்த அதிகாரிகள் சுமார் 30 பயணிகளுடன் பேருந்தை கோவை காந்திபுரத்திற்கு கொண்டு வந்தனர்.பின்னர் சுமார் 2 மணி நேரம் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே நிறுத்தி வைத்த வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள், பேருந்திற்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து பேருந்தை இயக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

இதை அடுத்து பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் கேரள மாநில அரசு பேருந்தை பிடித்தி அதில் ஏற்றிவிட்ட அதிகாரிகள் ஆம்னி பேருந்தை கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் ஆம்னி பேருந்து அனுமதி மீறல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ததுடன் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து அபராத தொகையை வசூலித்த பின்னரே பேருந்தை விடுவித்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த ஒரு மாத காலமாக இப்பிரச்சினை சென்று கொண்டுள்ள சூழலில் கல்லடா பேருந்து நிறுவன உரிமையாளர் தான் உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடுத்து அதன் அடிப்படையிலேயே வெளி மாநில பேருந்துகள் தமிழகத்திற்குள் இயக்குவதற்கு தடை விதிக்க கூடாது என்றும் வட்டாரப் போக்குவரத்து துறையினர் வெளி மாநில பதிவெண் கொண்ட பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தடை அமலில் இருக்கும் சூழலில் கோவையில் வட்டார போக்குவரத்து அலுவலர்களின் இந்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...