மாரடைப்பால் மரணமடைந்த கோவை காவல் கண்காணிப்பாளர்: சக காவலர்கள் கண்ணீர் அஞ்சலி

கோவை மாவட்டம் பேரூர் உட்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் வெற்றிச்செல்வன் மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்தார். சக காவலர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.


கோவை: கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் தாலுகாவைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் வெற்றிச்செல்வன் சிகிச்சையின் போது திடீர் மரணம் அடைந்தார். கோவை மாவட்டம் பேரூர் உட்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த வெற்றிச்செல்வனுக்கு வயது 56.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அதிகாலையில் ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக, சூலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். இடையில் இவரது உடல் நிலையில் சிறு முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

கடந்த மூன்று நாட்களாக கோவையில் உள்ள தலைமை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வெற்றிச்செல்வன், இன்று அதிகாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவு காவல் துறை வட்டாரங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சக காவல்துறை அதிகாரியின் இறப்புக்கு காவலர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...