தென்சேரிமலை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு நபார்டின் 'சிறந்த FPO' விருது

சென்னையில் நடைபெற்ற நபார்டின் 43வது ஆண்டு விழாவில், ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கும் தென்சேரிமலை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு 'சிறந்த FPO' விருது வழங்கப்பட்டது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் விருதை வழங்கினார்.


ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலின் கீழ் வெற்றிகரமாக இயங்கி வரும் தென்சேரிமலை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு (FPO) நபார்டு வங்கியின் 2023-24 ஆம் நிதியாண்டிற்கான 'சிறந்த FPO' விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று (ஜூலை 18) நடைபெற்ற நபார்டின் 43வது ஆண்டு விழாவில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இந்த விருதை வழங்கினார்.



தமிழ்நாட்டில் நபார்டு வங்கியின் ஆதரவுடன் சிறப்பாக செயல்படும் FPO-க்களில் ஒன்றாக தென்சேரிமலை FPO தேர்வு செய்யப்பட்டுள்ளது. விழாவில் தென்சேரிமலை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனரும் விவசாயியுமான திரு. ரங்கராஜ் மற்றும் ஈஷா அவுட்ரீச் சார்பில் சுவாமி நலதா ஆகியோர் அமைச்சரிடமிருந்து விருதைப் பெற்றுக் கொண்டனர்.

மண் காப்போம் இயக்கத்தின் ஒரு பகுதியாக ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கும் 25 FPO-க்களில் ஒன்றாக தென்சேரிமலை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் செயல்படுகிறது. கோவை சுல்தான்பேட்டை பகுதியில் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில், முதல் ஆண்டிலேயே 750-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக இணைந்தனர்.

இந்த FPO தனது உறுப்பினர் விவசாயிகளுக்கு தென்னை சாகுபடி மற்றும் சந்தைப்படுத்துதலில் வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. தென்னையை முதன்மைப் பயிராகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தின் முதலாம் ஆண்டு மொத்த விற்பனை ரூ.1.58 கோடியாகும். மேலும், ஈஷா அவுட்ரீச்சின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் FPO-க்கள் மூலம் மொத்தம் 9,377 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

விழாவில் நபார்டு வங்கியின் தலைமை மேலாளர், மண்டல மேலாளர், ரிசர்வ் வங்கியின் மண்டல மேலாளர் மற்றும் இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...