கோவையில் பள்ளி வேன் ஏறி முதலாம் வகுப்பு மாணவன் காயம்: அதிர்ச்சி தரும் சி.சி.டி.வி காட்சிகள்

கோவை சிங்காநல்லூரில் உள்ள வெங்கடலட்சுமி தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவன் மீது வேன் ஏறி விபத்து ஏற்பட்டது. ஓட்டுநரின் கவனக்குறைவால் நடந்த இச்சம்பவம் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.


கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ள வெங்கடலட்சுமி தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு முதலாம் வகுப்பு மாணவன் மீது பள்ளி வேன் ஏறி விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநரின் கவனக்குறைவால் இந்த விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், சிறுவன் மீது வேன் ஏறி இறங்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

விபத்தில் காயமடைந்த குழந்தைக்கு தற்போது அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருகூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் இரண்டு மகன்கள் இந்த தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். அவர்களில் முதலாம் வகுப்பு படிக்கும் சிறுவனே இந்த விபத்தில் சிக்கியுள்ளான்.

சம்பவம் நடந்த விதம் குறித்து விசாரணையில் தெரியவந்த தகவல்களின்படி, வேனில் இருந்து மாணவர்கள் இறங்குவதற்கு முன்பே ஓட்டுநர் வாகனத்தை இயக்கிவிட்டார். இதனால், சிறுவன் ஓடும் வேனில் இருந்து இறங்கிய போது தவறுதலாக சக்கரத்தின் கீழ் விழுந்து விபத்துக்குள்ளானான்.

விபத்து நடந்தவுடன், அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாக செயல்பட்டு, காயமடைந்த சிறுவனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக காட்டூர் போக்குவரத்து காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...