கோவை புரானியில் 78வது சுதந்திர தின விழா: திமுக செயலாளர் நா.கார்த்திக் தேசியக் கொடியேற்றினார்

கோவை புரானி காலனியில் 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திமுக செயலாளர் நா.கார்த்திக் தேசியக் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். பல்வேறு சமூக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை புரானி காலனியில் உள்ள "மஸ்ஜித் உல் குத்பி" புரானி-தாவூதி போரா ஜமாஅத் அசோசியேசன் சார்பில் 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வு 2024 ஆகஸ்ட் 15 அன்று காலை 7.30 மணியளவில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்.எல்.ஏ.), தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அவர் தனது சிறப்புரையில், அனைவருக்கும் 78வது சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.



இந்நிகழ்ச்சியில் கோவை புரானி தவூதிபோரா அசோசியேசன் சங்க நிர்வாகிகள் தலைவர் ஷேக் மோயிஸ் காட்டாவாலா, பி.ஆர். செயலாளர் அலி அஸ்கர், பி.ஜி.ஐ.கேப்டன் ஹூசேபா ஆகியோர் தலைமை வகித்தனர்.

மேலும், 27வது வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால், மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் இரா.தனபால், 27வது வார்டு துணைச் செயலாளர் அ. செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



வட்டப் பிரதிநிதிகள் வேலுச்சாமி, ரமேஷ் குமார், மாநகர் மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் லோகேஸ்வரி, கழக மூத்த முன்னோடிகள் கிருஷ்ணமூர்த்தி, கங்குவார் சீனு, எல் எம் டபிள்யூ சீனு, புருஷோத்தமன், அக்பரலி, நடேசன், தேசிங்கு ராஜன் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

திமுக மகளிர் அணியைச் சேர்ந்த திலகவதி, அன்பரசி, விஜயகுமாரி, விஜயா உள்ளிட்டோரும், புரானி-தாவூதிபோரா அசோசியேசன் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் மற்றும் தாவூதிபோரா இஸ்லாமிய பொதுமக்கள் பலரும் இந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...