முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகம் தோல் தான விண்ணப்பத்தை வழங்கினார்

கோவையில், முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகம் தோல் தான விண்ணப்பத்தை கங்கா மருத்துவமனை மருத்துவரிடம் வழங்கினார். அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் உள்ளிட்ட அமைப்புகள் தோல் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.


Coimbatore: கோவையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் கௌரவ தலைவரும், முன்னாள் நீதியரசருமான கற்பக விநாயகம் தோல் தானம் செய்வதற்கான விண்ணப்பத்தை கங்கா மருத்துவமனை மருத்துவர் ராஜா சண்முகம் கிருஷ்ணனிடம் வழங்கினார்.

இந்த நிகழ்வு, கோவையில் உள்ள கங்கா தோல் தானம் மையம், அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம், வோல்ட் மலையாளி கவுன்சில் மற்றும் ரோட்டரி 3201 ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் தோல் தானம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது.

முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகத்தின் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனத் தலைவர் ஆர்.கே.குமார், பொதுச் செயலாளர் வி.எச்.சுப்பிரமணியம், மகளிரணி தலைவி தேசிய ஒருங்கிணைப்பாளர் லதா அர்ஜூனன், மாநில தலைவர் ராஜேஷ்குமார், துணைத் தலைவர் செந்தில் குமார், சந்திரசேகர், குமார் தங்கவேல், சிவசக்தி மற்றும் கோல்டு மலையாளி கவுன்சில் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகம், "தோல் தானம் குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியமானது. கண் தானம் போன்ற உறுப்பு தானங்கள் குறித்த விழிப்புணர்வு இருந்தாலும், தோல் தானம் பற்றி பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. ஒருவர் மறைந்த பின்னும் தீக்காயம் பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க தோல் தானம் உதவுகிறது," என்று கூறினார்.

மேலும் அவர், "நாம் மறைந்த பின் செய்கின்ற தோல் தானத்தால் நாம் தெய்வமாகிறோம். எனவே பொதுமக்களுக்கு தோல் தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக முக்கியம்," என்று வலியுறுத்தினார்.

இந்த முயற்சி தோல் தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், மேலும் பலரை தோல் தானம் செய்ய ஊக்குவிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...