கோவையில் தோல் தான விழிப்புணர்வு குறும்படத்திற்கான பூஜை நிகழ்வு

கோவையில் தோல் தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 'தேன்மொழி' என்ற குறும்படத்திற்கான பூஜை நிகழ்வு நடைபெற்றது. அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம், ரோட்டரி 3201, கங்கா மருத்துவமனை மற்றும் வோல்ட் மலையாளி கவுன்சில் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.


கோவை: கோவை பந்தைய சாலையில் உள்ள ரோட்டரி 3201 அலுவலகத்தில் தோல் தான விழிப்புணர்வு குறித்த 'தேன்மொழி' குறும்பட பூஜை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வை மூத்த வழக்கறிஞர் சுந்தர வடிவேல் துவக்கி வைத்தார்.

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனத் தலைவர் ஆர்.கே.குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைப்பின் பொதுச் செயலாளர் வி.எச்.சுப்பிரமணியம், மாநில மகளிரணி தலைவி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் லதா அர்ஜூனன், மாவட்டத் தலைவர் ரமேஷ்குமார், மாவட்டத் துணைத் தலைவர் செந்தில் குமார், வோல்ட் மலையாளி கவுன்சில் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



குறும்படத்தின் இயக்குனர் குமார் தங்கவேல், நடிகை சிவசக்தி, குழந்தை நட்சத்திரம் பேபி ரக்சிதா ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

'தேன்மொழி' குறும்படம், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் கதையைச் சித்தரிக்கிறது. தனது அழகை இழந்த குழந்தைக்கு, கங்கா மருத்துவமனையின் தோல் தான மையம் எவ்வாறு உதவி புரிகிறது என்பதை இக்குறும்படம் விளக்குகிறது. மேலும், தோல் தானத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறது.

ரோட்டரி 3201 ஆளுநர் சுந்தரவடிவேல் கூறுகையில், "இக்குறும்படத்தின் மூலம் கங்கா தோல் தான மையத்தை எவ்வாறு அணுக வேண்டும் என்பதையும், ரோட்டரி 3201, அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம், வோல்டு மலையாளி கவுன்சில் ஆகியவை எவ்வாறு உதவுகின்றன என்பதையும் தெளிவாக எடுத்துரைக்க உள்ளோம்," என்றார்.

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் பொதுச் செயலாளர் வி.எச்.சுப்பிரமணியம், "தோல் தான விழிப்புணர்வு குறித்து பொதுமக்களிடம் போதிய அறிவு இல்லை. இக்குறும்படத்தின் மூலம் தோல் தானத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க உள்ளோம்," என்று தெரிவித்தார்.

மாநில மகளிரணி தலைவி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் லதா அர்ஜூனன் கூறுகையில், "தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு உண்டு என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த 'தேன்மொழி' குறும்படம் எடுக்கப்பட உள்ளது," என்றார்.

இக்குறும்படம் மூலம் தோல் தான விழிப்புணர்வை பரவலாக ஏற்படுத்தி, கங்கா மருத்துவமனை நடத்தி வரும் தோல் சேமிப்பு மையத்திற்கு உதவ முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...