கோவையில் 750 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன - அமைச்சர் முத்துசாமி

கோவை மாவட்டத்தில் 750 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன. ரேஷன் பொருட்களின் தட்டுப்பாடுகள் 90% சரி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். மேலும் சாலை மற்றும் பாதாள சாக்கடை பணிகள் குறித்தும் விளக்கமளித்தார்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.



நிகழ்ச்சியின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, கோவை மாவட்டத்தில் 1,542 ரேஷன் கடைகள் இருப்பதாகவும், 11 லட்சத்து 42 ஆயிரம் குடும்ப அட்டைகள் மூலம் சுமார் 34 லட்சம் மக்கள் பயனடைவதாகவும் தெரிவித்தார். இன்றைய தினம் 750 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக 6,000 பேருக்கு குடும்ப அட்டை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

குடும்ப அட்டை கோரி மனு அளித்த சிலருக்கு கிடைக்காத சூழ்நிலை குறித்து விளக்கமளித்த அமைச்சர், மனுக்களில் குறைபாடுகள் அல்லது ஒரே குடும்பத்தில் இரண்டு அட்டைகள் கோரப்பட்டிருந்தால் அவை தற்காலிகமாக நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மீண்டும் மனு அளித்தால், அது குறித்து ஆய்வு மேற்கொண்டு நியாயமானதாக இருந்தால் அதனையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்தும் பேசிய அமைச்சர், ஏறத்தாழ 1 கோடியே 17 லட்சம் பேருக்கு இத்தொகை வழங்கப்படுவதாகவும், கூடுதலாக 1 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மனு அளிக்கலாம் என்றும், அந்த மனுக்களில் எந்த குறைபாடும் இல்லாவிட்டால் அவர்களும் பயனாளிகள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் இருந்த தட்டுப்பாடுகள் குறித்தும் பேசிய அமைச்சர், தற்போது 90 சதவீதம் சரி செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவற்றையும் சரி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியர் இதனை கண்காணித்து வருவதாகவும், குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் கூறினார்.



ரேஷன் கடைகளில் கைரேகை பதிவாகாத பிரச்சினை குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பேசுகையில், அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கண் விழி பதிவு கருவி வழங்கப்பட்டுள்ளதாகவும், கைரேகை பதிவாகாத பட்சத்தில் கண் கருவிழி மூலம் பதிவு செய்யப்பட்டு ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

சாலை மற்றும் பாதாள சாக்கடை பணிகள் குறித்தும் விளக்கமளித்த ஆட்சியர், சாரதா மில் சாலை, பாலக்காடு சாலை பழுதடைந்துள்ளதாகவும், பாதாள சாக்கடை பணிகள் முடிந்தாலும் சில பணிகள் தொடர்வதாகவும் கூறினார். மழை காரணமாகவும், இரவு நேரங்களில் மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்படுவதாலும் தாமதங்கள் ஏற்படுவதாகத் தெரிவித்தார். வரும் 15 நாட்களுக்குள் மாநகரில் முக்கிய சாலைகளின் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

Newsletter

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...