கோவையில் பாஜக இளைஞர் அணி செயலாளர் மீது கொலை முயற்சி தாக்குதல்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் பாஜக இளைஞர் அணி செயலாளர் சதீஷ்குமார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கொலை முயற்சி தாக்குதல் நடத்தினர். காயமடைந்த சதீஷ்குமார் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Coimbatore: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மண்டல இளைஞர் அணி செயலாளர் சதீஷ்குமார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கொலை முயற்சி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் கடுமையாக காயமடைந்த சதீஷ்குமார் உடனடியாக தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (கங்கா) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடன் ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதல் நடத்திய நபர்களை கண்டறியும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கொடூரமான தாக்குதலை கண்டித்து கோவை மாவட்ட தெற்கு பாஜக தலைவர் வசந்த ராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தை எதிர்த்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் பாஜக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...