கோவையில் மிலாடி நபி விழா: இஸ்லாமியர்கள் ஊர்வலம், சிறுவர்கள் நடனம்

கோவையில் மிலாடி நபி விழாவை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ஊர்வலம் நடத்தினர். செல்வபுரம் பகுதியில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் நடனமாடினர். நபிகள் நாயகத்தின் வாழ்வியல் நெறிமுறைகளை நினைவுகூர்ந்தனர்.



கோவை: கோவையில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ஊர்வலம் நடத்தினர். உலகம் முழுவதும் நபிகள் நாயகம் பிறந்த நாளை மிலாடி நபி பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி, கோவையில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.



இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஊர்வலங்கள் நடைபெற்றன. குறிப்பாக, செல்வபுரம் பகுதியில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் நடனமாடினர்.



இஸ்லாமிய சிறுமிகள் மிலாடி நபி கொடி ஏந்தி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், நபிகள் நாயகம் இஸ்லாமியர்களுக்கு வகுத்த வாழ்வியல் நெறிமுறைகளை நினைவுகூர்ந்தனர். உலக மக்கள் பாகுபாடு இன்றி நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும், சாதி மத பேதம் இன்றி ஏழை பணக்காரர் பாகுபாடு இன்றி அனைவரும் சமம் என்ற அடிப்படையில் வாழ வேண்டும் என்ற நபிகள் நாயகத்தின் போதனைகளை நினைவுகூர்ந்தனர்.

இமாம்கள் பேசுகையில், "நபிகள் நாயகம் எடுத்துரைத்த வாழ்வியல் நெறிமுறைகளை உலகத்திற்கு பறைசாற்றும் விதமாக இந்த ஊர்வலத்தை நடத்துகிறோம்" என்று தெரிவித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...