மேட்டுப்பாளையம் அருகே 35 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு குட்டையில் இருந்த முதலையை வனத்துறையினர் பிடித்தனர்

மேட்டுப்பாளையம் அருகே பட்டக்காரனூர் கிராமத்தில் குட்டையில் இருந்த முதலையை 35 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையினர் பிடித்தனர். முதலை பவானிசாகர் அணைப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டையில் முதலை இருப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் குமார் தலைமையிலான வனத்துறையினர் அந்தப் பகுதியில் ஆய்வு செய்து முதலை இருப்பதை உறுதி செய்தனர்.

குட்டையில் 10 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கி நிற்பதால், முதலையைப் பிடிக்க தண்ணீரை முழுவதுமாக அப்புறப்படுத்த திட்டமிடப்பட்டது. நேற்று காலை 11 மணி முதல் பெட்ரோல் மூலம் இயங்கும் மோட்டார் பம்ப்செட்டுகளைக் கொண்டு குட்டையில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

இன்று மதியம் 3 மணி அளவில் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு, முதலையை பிடிக்கும் பணி தொடங்கியது.



தண்ணீர் குறைந்தவுடன் அங்குமிங்கும் ஓடிய முதலையை, கயிற்றில் சுருக்கு வைத்து வனத்துறையினர் வெளியே எடுத்து வந்தனர்.



பிடிபட்ட முதலையின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு, உடல் ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.



பின்னர், அந்த முதலையை பவானிசாகர் அணைப்பகுதிக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் எடுத்துச் சென்றனர்.

கிட்டத்தட்ட 35 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, குடியிருப்பு அருகே உள்ள குட்டையில் இருந்த முதலை மீட்கப்பட்டு, பவானிசாகர் அணையில் விடுவிக்க எடுத்துச் செல்லப்பட்டது. வனத்துறையினரின் இந்த முயற்சிக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...

கோடைக்காலம்: Pothannur வழித்தடத்தில் Mangaluru-Chennai சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு Karnataka மாநிலம் Mangaluru-இல் இருந்து Chennai Egmore-க்கு Pothannur வழித்தடத்தில் சிறப்பு ரயி...