'வனத்துறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை TNPSC மூலம் நிரப்ப உள்ளோம்' - வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்

கோவையில் நடைபெற்ற 27வது மாநில வனத்துறை விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழாவில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்றார். வனத்துறையில் உள்ள காலிப் பணியிடங்கள், யானைகள் பாதுகாப்பு குறித்து அவர் பேசினார்.



கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மாநில வனக்கல்லூரி விளையாட்டுத் திடலில் இன்று (செப்.19) 27வது மாநில வனத்துறை விளையாட்டுப் போட்டிகளுக்கான துவக்க விழா நடைபெற்றது.



இவ்விழாவில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகளை துவக்கிவைத்தார்.



இந்நிகழ்வில் கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச் செல்வன், முதன்மை வனப்பாதுகாவலர் மற்றும் வனத்துறை தலைவர் சுதான்சு குப்தா, சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத்துறை அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



அமைச்சர் மதிவேந்தன், பல்வேறு வன மண்டலங்களைச் சேர்ந்த படை அணியினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, ஒலிம்பிக் ஜோதியை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

விழாவிற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மதிவேந்தன், "27வது மாநில வனத்துறை விளையாட்டுப் போட்டிகளில் தேர்வாகும் வீரர்கள், அகில இந்திய வனத்துறை விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறுவார்கள். வனத்துறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. இவற்றை TNPSC மூலம் நிரப்ப உள்ளோம்," என்றார்.

மேலும் அவர், "யானை வழித்தடங்களை கண்டறிந்து ஆராய்ந்து வருகிறோம். தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது வனத்துறையின் சிறப்பான செயல்பாட்டிற்கான அறிகுறி. யானை-மனித மோதலைத் தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்," என்று குறிப்பிட்டார்.

வனவிலங்கு பிரச்சனைகள் குறித்து பேசிய அமைச்சர், "எல்லா இடங்களிலும் வனவிலங்கு பிரச்சனைகள் உள்ளன. பிரச்சனைகள் அதிகமாக உள்ள இடங்களில் அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். மருதமலை அருகே உள்ள குப்பை கிடங்கை அகற்றும் நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசுவோம்," என்றார்.

இறுதியாக, "வேட்டை தடுப்பு காவலர்களின் ஊதிய உயர்வு குறித்து பரிசீலித்து வருகிறோம். நன்னீர் நாய்கள் அழிவு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்போம். வரையாடு பாதுகாப்பில் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது," என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...