நிபா வைரஸ் தடுப்பு: கோவை-கேரள எல்லையில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக, கோவை மாவட்டத்தின் காரமடை பகுதியில் உள்ள கேரள எல்லைப் பகுதிகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். வாகனங்களில் வரும் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது.


கோவை: கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் தாக்கி ஒரு வாலிபர் இறந்ததைத் தொடர்ந்து, தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, கோவை மாவட்டத்தின் காரமடை பகுதியில் உள்ள கேரள எல்லைப் பகுதிகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கோபனாரி மற்றும் முள்ளி பகுதிகளில் மருத்துவக் குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன.

டாக்டர் பிரவீன் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர், அந்த வழியாக செல்லும் வாகனங்களில் தீவிர காய்ச்சல் பரிசோதனை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் குழுவில் சுகாதார ஆய்வாளர் ஹேமலதா, இரண்டு நர்சுகள் மற்றும் ஒரு மருந்தாளுநர் உள்ளிட்டோர் அடங்கியுள்ளனர்.

காரமடை மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு வரும் நபர்களுக்கும் காய்ச்சல் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. மேலும், வாகனங்களில் வரும் பயணிகளுக்கும் காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது. தொடர்ந்து பொதுமக்களுக்கு நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் வழங்கப்படுகின்றன.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...