கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் தமிழ்நாடு-கேரள எல்லை ஒருங்கிணைப்பு கலந்தாய்வு கூட்டம்

கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் தமிழ்நாடு-கேரள எல்லை ஒருங்கிணைப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இரு மாநில காவல் அதிகாரிகள் எல்லை தாண்டிய குற்றங்கள், சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.


Coimbatore: கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில காவல்துறையினரின் எல்லை ஒருங்கிணைப்பு கலந்தாய்வு கூட்டம் செப்டம்பர் 19 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்தகேயன் மற்றும் கேரளா காவல் கண்காணிப்பாளர் ஆனந்த்ப் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இக்கலந்தாய்வு கூட்டத்தில் கோவை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சுரேஷ், கேரளா பாலக்காடு உதவி காவல் கண்காணிப்பாளர் அஸ்வதி ஜுஜி, பாலக்காடு கலால் துறை ஆணையர் ராகேஷ், பெரியநாயக்கன் பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர் சிவகுமார், வால்பாறை துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி, மாவட்ட குற்றப்பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் இளமுருகன், அகலி துணை காவல் கண்காணிப்பாளர் அசோகன் உள்ளிட்ட பல்வேறு காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் மாநிலங்களுக்கிடையேயான குற்றவாளிகளின் செயல்பாடுகள், உளவுத்துறை தகவல்கள் பரிமாற்றம், லாட்டரி, பாலியல் தொழில், போலி மது, கஞ்சா, கனிமங்கள், மணல், மதிப்புமிக்க பொருட்கள் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், எல்லை சோதனைச் சாவடிகளின் செயல்பாடுகள், இரு மாநிலங்களின் தனிப்படைகளை ஒருங்கிணைப்பது, NBW கைதிகளை கைது செய்தல், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு ஆகிய விஷயங்களும் ஆலோசிக்கப்பட்டன.



சட்டவிரோத போக்குவரத்து, மருத்துவக் கழிவுகள் மற்றும் கால்நடைக் கழிவுகளை கொட்டுவதைத் தடுத்தல், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பதில் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு போன்ற பிரச்சினைகளும் விவாதிக்கப்பட்டன. இரு மாநில காவல் அதிகாரிகளும் எல்லை தாண்டி செயல்படும்போது எதிர்கொள்ளும் இடையூறுகளை எடுத்துரைத்தனர். இதையடுத்து, இரு மாநில காவல் கண்காணிப்பாளர்களும் பணியில் உள்ள இடையூறுகளை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...