மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் காட்டு யானை நடமாட்டம்: வாகன ஓட்டிகள் அச்சம்

மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் மரப்பாலம் பகுதியில் காட்டு யானை நடமாட்டம் கண்டு வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



Coimbatore: மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் மரப்பாலம் பகுதியில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு செல்வதற்காக கோத்தகிரி மற்றும் குன்னூர் ஆகிய இரண்டு வனச்சாலைகள் உள்ளன. இந்த வனச்சாலைகளில் வனவிலங்குகள் நடமாட்டம் இருந்து வரக்கூடிய நிலையில், தற்போது லேசான வறட்சி வனப் பகுதியில் ஏற்பட்டிருக்க கூடிய நிலையில் வன உயிரினங்கள் வனத்தின் சாலை ஓரங்களில் இருக்கக்கூடிய பொருட்களை மேய வெளியே நடமாடி வருகிறது.



மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் மரப்பாலம் என்ற இடத்தில் ஒற்றை காட்டு யானை சாலை ஓரத்தில் இருந்த பொருட்களை மேய்ந்து கொண்டு நடமாடிக் கொண்டிருந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனங்களை அந்தந்த பகுதிகளிலேயே நிறுத்திக் கொண்டனர்.

சாலையோரத்தில் நின்று கொண்டிருக்க கூடிய யானை திடீரென தங்களை தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. சுமார் அரை மணி நேரம் அங்கேயே உலாவிய அந்த காட்டு யானை பின்னர் அடர் பகுதிக்குள் சென்று மறைந்தது.

இதனால் மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் சற்று நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்ததுடன் வாகன ஓட்டிகளும் அச்சமடைந்தனர். இனிவரும் காலங்களில் வன உயிரினங்களின் நடமாட்டம் சாலை ஓரங்களில் இருக்க வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் மிதவேகத்தில் சென்று எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்குமாறு வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...