தாராபுரம் அருகே சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தாராபுரம் ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் ஓலக்கடை எதிரே உள்ள தனியார் கேஸ் பங்க் அருகே சிறுத்தை ஒன்று இருப்பதை தாராபுரம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 40) பார்த்தார். உடனடியாக அவர் தாராபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.



இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் தலைமை காவலர்கள் கருப்புசாமி மற்றும் சேகர் ஆய்வு செய்தனர். பின்னர் காங்கேயம் வனச்சரக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காங்கேயம் வனச்சரக அலுவலர் மௌனிகா தலைமையில் வனக்காவலர் குணசேகரன், வனக்காப்பாளர் பூரணி ஆகியோர் தனியார் கேஸ் பங்கின் அருகில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை வந்ததற்கான தடயங்கள் உள்ளதா என்பதை ஆராய்ந்தனர். மேலும், சிவக்குமாரிடம் சிறுத்தையின் அடையாளங்களை கேட்டறிந்தனர். இப்பகுதியின் அருகே ரங்கம்பாளையம், கருவேலம்பள்ளம், ஆச்சியூர், மங்களம்பாளையம் பிரிவு, கோனேரிப்பட்டி, துலுக்கனூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது.

வனக்காவலர்கள் சிறுத்தையின் கால் தடம் உள்ளதா என்பது குறித்து பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...