கோவையில் இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்: பிசியோதெரபிஸ்ட் கைது

கோவை ஐ.ஓ.பி. காலனியில் 68 வயது பிசியோதெரபிஸ்ட் 23 வயது இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். சம்பவம் 2023 ஜனவரியில் நடந்தது.


Coimbatore: கோவை மருதமலை அடுத்த ஐ.ஓ.பி. காலனியைச் சேர்ந்த 68 வயது பிசியோதெரபிஸ்ட் அனந்தகிருஷ்ணன், 23 வயது இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

2022ம் ஆண்டு ஐ.ஓ.பி. காலனியில் புதிதாக வீடு கட்டி வந்த அனந்தகிருஷ்ணன், கோவை ராமநாதபுரத்தில் தங்கி கட்டடக்கலை நிபுணராக பணிபுரிந்து வரும் திண்டுக்கல்லைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணை கட்டட வடிவமைப்பிற்காக அழைத்திருந்தார். இதன்போது இருவரும் நட்பாகப் பழகி வந்தனர்.



2023ம் ஆண்டு ஜனவரி மாதம், புதிய வீட்டின் வடிவமைப்பு குறித்து சில சந்தேகங்கள் இருப்பதாகக் கூறி அனந்தகிருஷ்ணன் அந்தப் பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்தார். அங்கு அவருக்கு மயக்க மருந்து கலந்த காபி கொடுத்து, மயங்கிய நிலையில் பாலியல் பலாத்காரம் செய்தார்.

கண் விழித்த பெண் அங்கிருந்து தப்பிச் சென்று வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் புகாரை ஏற்க மறுத்த காவல்துறையினர் அந்தப் பெண்ணை அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்தப் பெண் தேசிய மகளிர் ஆணையத்தை நாடினார்.



மகளிர் ஆணையம் இது குறித்து விசாரணை நடத்தும்படியும், வடவள்ளி காவல் நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் மாநகர காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், போத்தனூர் உதவி ஆணையர் கரிகால் பாரி சங்கரை சிறப்பு புலனாய்வு அதிகாரியாக நியமித்தார்.

விசாரணையில் பாலியல் பலாத்காரம் உறுதியானதை அடுத்து தலைமறைவான அனந்தகிருஷ்ணன், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளியில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். பின்னர் கோவைக்கு அழைத்து வரப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு செப்டம்பர் 24 அன்று சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...