கோவை கவுண்டம்பாளையத்தில் யானை தந்தம் விற்க முயன்ற 6 பேர் கைது

கோவை கவுண்டம்பாளையம் அருகே தனியார் குடோனில் யானை தந்தங்கள் விற்பனை முயற்சியில் ஈடுபட்ட 6 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். இரண்டு யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை: கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதிக்கு அருகில் உள்ள தனியார் குடோனில் யானை தந்தங்கள் விற்பனை முயற்சியில் ஈடுபட்ட 6 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

நேற்று (செப்டம்பர் 26) மாலை சுமார் 4.30 மணி அளவில் யானை தந்தங்கள் விற்க முயற்சி செய்வதாக தமிழ்நாடு வனவிலங்கு குற்றக்கட்டுப்பாட்டு ஆணையக் குழுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்தில் சோதனை நடத்தினர்.

சோதனையின் போது, சுமதி (55), ஆஸாத் அலி (45), நஞ்சப்பன் (47), சந்தோஷ் பாபு (42), கோவிந்தராஜுலு (65) ஆகிய ஐந்து பேர் டிராவல் பேக் ஒன்றில் இரண்டு தந்தங்களுடன் குடோனின் உள்பகுதியில் அமர்ந்து தந்தத்தை விற்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். வனத்துறையினர் அவர்களை உடனடியாக கைது செய்தனர்.

விசாரணையின் போது, கைப்பற்றப்பட்ட யானை தந்தங்கள் இரண்டும் செந்தில் வேலன் (62) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...