உடுமலை திருப்பதி கோவிலில் நவராத்திரி கொழு விழா துவக்கம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் 9 நாள் நவராத்திரி கொழு விழா துவங்கியது. அம்பாள் சைலபுத்திரி தேவி வடிவில் காட்சியளித்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள புகழ் பெற்ற உடுமலை வெங்கடேச பெருமாள் கோவிலில் இன்று முதல் வருகின்ற 12ஆம் தேதி வரை நவராத்திரி கொழு விழா நடைபெற உள்ளது.

முதல் நாளான இன்று அம்பாள் சைலபுத்திரி தேவி வடிவத்தில் மஞ்சள் நிற பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்திருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் வெங்கடேச பெருமாள் சாமி புறப்பாடு மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.



கோவில் பகுதியில் கொலு பொம்மை கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் சாமி சிலைகள், திருமணம் நடைபெறுவது போன்ற காட்சிகள், பெண் தெய்வங்கள், கும்பகர்ணன் தூங்குவது போன்ற சாமி சிலைகள், கன்னிப்பெண்கள் சிலை உட்பட பல்வேறு வகையான சாமி சிலைகள் கொழு பொம்மை கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. இவற்றை ஏராளமான பொதுமக்கள் தங்களது தொலைப்பேசியில் புகைப்படம் எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தனர்.

நவராத்திரி கொழு விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பக்தி பாடல்களுக்கு பரத நாட்டியம் மற்றும் புராணக் கதைகளை மாணவ மாணவிகள் நடனமாடி காட்டினர்.

உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் இன்று தொடங்கிய நவராத்திரி கொழு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...