கோவை உடையாம்பாளையம் டாஸ்மாக் கடை அருகே கள்ள சந்தையில் மது விற்பனை - சப்ளையர் கைது

கோவை உடையாம்பாளையத்தில் டாஸ்மாக் கடை பின்புறம் கள்ள சந்தையில் மது விற்பனை செய்த சப்ளையர் கைது செய்யப்பட்டார். போலீஸ் சோதனையில் 28 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை: கோவை உடையாம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை அருகே கள்ள சந்தையில் மது விற்பனை செய்த சப்ளையர் கைது செய்யப்பட்டார்.

கோவை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் சப் இன்ஸ்பெக்டர் குரு கணேஷ் ஆகியோர் நேற்று (அக்டோபர் 7) உடையாம்பாளையம் டாஸ்மாக் கடை (எண் 16 18) பின்புறம் உள்ள காலி இடத்தில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியை சேர்ந்த மங்கையநேந்தல் ஊரைச் சேர்ந்த சரவணன் (வயது 41) என்பவர் கைது செய்யப்பட்டார். சரவணன் அங்குள்ள பாரில் சப்ளையராக வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது. இவரிடமிருந்து 28 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கள்ள சந்தையில் மது விற்றதாக இவர் மீது ஏற்கனவே 16 வழக்குகள் உள்ளது என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...