கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.


Coimbatore: தமிழகத்தில் நாளை மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால் தேர்தல் களம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தங்களது தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



அந்த வகையில், கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட அண்ணா நகர், கலைஞர் நகர், நேரு நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அதற்கு முன்பாக திமுக இளைஞரணி நிர்வாகிகள், தன்னார்வலர்கள் மற்றும் கட்சியினர் இணைந்து இருசக்கர வாகன பேரணியும் நடத்தினர்.

பின்னர் பொதுமக்களிடம் பேசிய அவர், “கழக ஆட்சியின் சாதனைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைந்துள்ளதை உங்கள் வரவேற்பின் மூலம் உணர முடிகிறது. வரும் 23ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவில் உதயசூரியன் சின்னத்திற்கு நீங்கள் ஆதரவு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.



உங்கள் ஆதரவுடன் சட்டமன்றம் செல்லும் வாய்ப்பு கிடைத்தால், அங்கே உங்கள் குரலாக ஒலிப்பேன். தொகுதியின் தேவைகளை வலியுறுத்தி நிறைவேற்றப் பாடுபடுவேன். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் போது அரசின் பல்வேறு நலத்திட்டங்களை உங்கள் இல்லங்களுக்கே கொண்டு சேர்க்கும் வகையில் செயல்படுவேன்.

இல்லத்தரசி திட்டம், மகளிர் உரிமைத்தொகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. சொன்னதைச் செய்வது திமுக அரசின் பண்பாகும். தமிழ்நாட்டின் வளர்ச்சியை தொடர உறுதிசெய்ய உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்,” என்றார்.

மேலும், செட்டிபாளையம் பகுதிகளில் பிரச்சார ஏற்பாடுகளை செய்த கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர், உடன்பிறப்புகள் மற்றும் வாகன பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...