கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது. வாக்குச்சாவடிகளில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.


Coimbatore:

கோவை: தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026ற்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் 10 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 27,44,472 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 13,22,759 ஆண் வாக்காளர்கள், 14,21,179 பெண் வாக்காளர்கள் மற்றும் 534 இதர வாக்காளர்கள் அடங்குகின்றனர். மாவட்டம் முழுவதும் 3,540 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.



ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு மாதிரி வாக்குச்சாவடி, பெண்கள் முழுமையாக நிர்வகிக்கும் வாக்குச்சாவடி மற்றும் இளைஞர்கள் நிர்வகிக்கும் வாக்குச்சாவடிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 182 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டு, அங்கு மத்திய பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பல இடங்களில் இணையவழி நேரலை வசதியுடன் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 70 வாக்குச்சாவடிகளில் வீடியோ கேமராக்கள் மற்றும் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் பணிகளில் மொத்தம் 16,992 வாக்குப்பதிவு அலுவலர்கள், 165 நுண்பார்வையாளர்கள் மற்றும் 6,240 காவல்துறை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு இலவச வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 3 வாகனங்கள் வீதம் மொத்தம் 39 வாகனங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று காலை சாய்பாபா காலனியில் உள்ள ஒரு பள்ளியில் தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் ஹாஜி முகமது ரபிக் தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு அமைதியாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. வாக்காளர்கள் எவ்வித அச்சமும் இன்றி தங்கள் வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...