வேப்ப மரத்திற்கு புத்துயிர் தந்த தன்னார்வலர்கள்


கோவை ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் தனியார் கட்டிட கட்டுமானப்பணிக்கு வேப்ப மரம் ஒன்று இடையூறாக இருப்பதாகவும்,அதை வெட்ட அனுமதி வேண்டியும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு விண்ணப்பம் வந்தது.



இது குறித்து தகவலறிந்த ஓசை, மற்றும் ராக் அமைப்பினர் அதிகாரிகளிடமும், சம்பந்தப்பட்ட நபர்களிடமும் பேசி அம்மரத்தை வேறு இடத்தில் நடவு செய்ய முடிவு செய்தனர்.



அதன்படி இன்று ஜி.வி.ரெசிடென்சி பகுதிக்கு ஆர்.டி.ஓ. மதுராந்தகி, ஓசை சையது, ராக் ரவீந்திரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சென்று வேப்ப மரத்தை மறு நடவு செய்ய ஆய்வு நடத்தினர். 



பின்னர், வேறோடு பிடுங்கப்பட்ட வேப்பமரத்தை அப்பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் நடவு செய்தனர்.

தன்னார்வலர்களின் இந்த முயற்சி மூலம் ஒரு மரத்தின் உயிர் கைப்பற்றப்பட்டதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...