காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை திருடிச் சென்றனர். ரூ.2.5 லட்சம் மதிப்பிலான இத்திருட்டு சம்பவம் காங்கேயம் பகுதி விவசாயிகள் மத்தியில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறது.


Tiruppur: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள பாப்பினி பகுதியில் விவசாயி பொன்னுசாமியின் (65) தோட்டத்தில் இருந்து மர்ம நபர்கள் 19 ஆடுகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயம் செய்து வருவதோடு ஆடு மாடுகளையும் வளர்த்து வரும் பொன்னுசாமி, வழக்கம் போல் நேற்று மாலை ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு மாலை நேரத்தில் தோட்டத்தில் உள்ள முக்கால் பட்டியில் அடைத்துவிட்டு இரவு தங்குவதற்காக வீட்டுக்கு சென்றார்.




நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தோட்டத்து பட்டியில் அடைத்து வைத்திருந்த 11 ஆடுகள், 1 கிடாரி மற்றும் 7 குட்டிகள் ஆகிய மொத்தம் 19 ஆடுகளை திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.2.5 லட்சம் ஆகும் என்று விவசாயி பொன்னுசாமி தெரிவித்தார். காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விடுவதற்காக சென்றபோது ஆட்டுப்பட்டி காலியாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொன்னுசாமி உடனடியாக காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


புகாரின் அடிப்படையில் காங்கேயம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். வழித்தடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காங்கேயம் பகுதியில் சமீபத்தில் வெறிநாய்கள் கடித்து ஆடுகள் இறந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மர்ம நபர்கள் ஆடுகளை திருடிய சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தண்ணீர் இல்லாமல் விவசாயமே பொய்த்துப்போன நிலையில் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து அதில் வருமானம் ஈட்டிவரும் விவசாயிகள் மத்தியில் இந்த திருட்டு சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருடப்பட்ட ஆடுகளை மீட்டு குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று பகுதி மக்கள் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...