கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக்க கதவை உடைத்து முகமூடி திருடர்கள் பீரோவை உடைக்க முயன்றபோது அண்டை வீட்டார் கண்டதும் தப்பியோடினர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் வெள்ளியங்காட்டு தோட்டத்தைச் சேர்ந்த நாச்சிமுத்து (வயது 45), அவரது மனைவி கௌசல்யா (வயது 40) மற்றும் மகள் கவிகா ஸ்ரீ (வயது 19) ஆகியோர் வசித்து வருகின்றனர். நாச்சிமுத்து தளவாய்பட்டினம் கிராமத்தில் மின்வாரிய துறையில் பணியாற்றி வருகிறார்.






நேற்று மாலை சுமார் 7 மணியளவில் நாச்சிமுத்து தனது வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு தரிசனம் செய்யச் சென்றிருந்தார். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். பீரோ மற்றும் லாக்கரை உடைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரத்தில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபர் ஏதோ வித்தியாசமான சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தார்.






திருடர்கள் முகமூடி அணிந்தவாறு தப்பியோடிய காட்சியை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர், உடனடியாக நாச்சிமுத்துக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். இதனை அறிந்து அவர் மற்றும் அவரது மனைவி கௌசல்யா வீட்டிற்கு விரைந்து சென்றபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு உள்ளே உள்ள பீரோ சேதப்படுத்தப்பட்டிருந்தது. முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயன்று தோல்வியடைந்தது தெரியவந்தது.






இச்சம்பவம் குறித்து தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து தாராபுரம் போலீஸ் Inspector ராமச்சந்திரன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு முகமூடி கொள்ளையர்கள் விட்டுச்சென்ற ஆதாரங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.






இது குறித்து நாச்சிமுத்துவின் உறவினர் கொங்கு ரமேஷ் கூறுகையில், "தாராபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் போலீசார் சரியான ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை. இதனால் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி இதுபோன்ற திருட்டு மற்றும் திருட்டு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எனவே இரவு நேரங்களில் போலீசார் முறையான ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும். திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட முயன்ற முகமூடி கொள்ளையர்களை விரைவில் பிடிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.




கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிந்தாபுரம் அருகே தோட்டத்துச் சாலையில் முகமூடி கொள்ளையர்கள் வயதான முதியவரை தாக்கி பணம் நகை கொள்ளையடித்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் நடைபெற்றுள்ள இந்த திருட்டு முயற்சி சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...