கேரள போலீசாரால் தேடப்பட்டுவந்த குற்றவாளி கோவையில் கைது



பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் முகம்மது இலியாஸ். இவர் மீது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மோசடி வழக்கு உள்ளது. இந்த மோசடி வழக்கு தொடர்பாக, அம்மாநில போலீசார் முகம்மது இலியாசை தேடிவந்தனர். ஆனால், அவர் வெளிநாட்டுக்கு சென்று தலைமறைவாகிவிட்டார்.

இந்த நிலையில், கேரள போலீசார் முகம்மது இலியாசின் புகைப்படம் மற்றும் அவர் தொடர்பான விவரங்களை விமான நிலைய இமிகிரேசன் (வெளிநாடு செல்வோர்களை சோதனை செய்யும் பிரிவு) அதிகாரிகளிக்கு கொடுத்தனர்.

அதன் பேரில், இன்று காலை 4.30 மணியளவில் சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்ததினர். அப்போது முகம்மது இலியாஸ் திருவனந்தபுரம் போலீசாரால் தேடப்படுபவர் என்பது தெரியவந்தது. 

இதனைத்தொடர்ந்து, திருவனந்தபுரம் போலீசாருக்கு, விமான நிலைய அதிகாரிகள் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, கேரள போலீசார் கோவைக்கு விரைந்துள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...