12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் மீ. தமிழ்செல்வி தெரிவித்துள்ளார். மண் பரிசோதனை செய்து உரம் பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடை மற்றும் பயிர் சாகுபடிக்காக மொத்தம் 12,522 மெட்ரிக் டன் உரங்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் மீ. தமிழ்செல்வி தெரிவித்துள்ளார்.

இந்த மொத்த இருப்பில் யூரியா 3,176 மெட்ரிக் டன், டிஏபி 1,458 மெட்ரிக் டன், பொட்டாஷ் 2,033 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 1,342 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளெக்ஸ் உரங்கள் 4,513 மெட்ரிக் டன் ஆகியவை மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் பொதுவாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் மண் பரிசோதனை செய்து அதற்கேற்ப உரங்களை பயன்படுத்தவும், அல்லது "தமிழ் மண் வள செயலி" பரிந்துரைப்படி உரங்களை பயன்படுத்தவும் வேளாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.

உர விற்பனையாளர்கள், விவசாய நிலப்பரப்பு மற்றும் பயிர் தேவைக்கு ஏற்ப ஆதார் எண்ணை பதிவு செய்து மட்டுமே உரங்களை விநியோகம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயியின் கைப்பேசி எண் மற்றும் கையொப்பத்துடன் ரசீது வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நோனோ யூரியா, நோனோ டிஏபி, உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் பயன்படுத்துவதன் மூலம் உர பயன்பாடு குறைந்து மண் வளம் அதிகரித்து, செலவும் குறையும் என வேளாண்மை துறை தெரிவித்துள்ளது.

உர விற்பனையில் முறைகேடுகள் அல்லது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் வேளாண்மை இணை இயக்குநர் மீ. தமிழ்செல்வி எச்சரித்துள்ளார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...