காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் வலியுறுத்தி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.


கோவை: மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதனை கண்டித்து கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுதன் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், மயிலாடுதுறையில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது திமுகவினர் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடையோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், கோவை மாநகரில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு திமுகவினரிடமிருந்து போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுதன், “மயிலாடுதுறையில் தாக்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கூட்டணி தவெக வுக்கு ஆதரவு அளித்த சூழலில் இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவது கண்டனத்திற்குரியது” என்று தெரிவித்தார்.

எனவே, இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...